திருச்சி உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முதலமைச்சர் விஜய் சார்பில் பதில் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகளைக் காரணம் காட்டி இடைத்தேர்தலைத் தள்ளிவைப்பது ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது என்றும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் அத்தொகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்களது அன்றாடப் தேவைகள் மற்றும் அடிப்படைப் பணிகளை நிறைவேற்ற முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரும் இந்த மனுவை உயர் நீதிமன்றம் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
