“கேரளாவில் விசித்திரம்…! பக்தர்களுக்கு ‘மஞ்ச்’ சாக்கலேட்டை பிரசாதமாக வழங்கும் சுப்பிரமணிய சுவாமி கோவில்… இணையத்தில் வைரலாகும் சுவாரஸ்ய பின்னணி…!!

By Devi Ramu on ஆவணி 28, 2026

Spread the love

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள தலவாடி பகுதியில் அமைந்துள்ளது ‘தெக்கன் பழனி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மகா க்ஷேத்திரம்’. இந்த ஆலயத்தில் முருகப்பெருமானுக்குப் பாரம்பரிய பிரசாதங்களுக்குப் பதிலாக ‘மஞ்ச்’ சாக்கலேட் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு, பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

சிறுவன் ஒருவன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது முருகப்பெருமானுக்கு மஞ்ச் சாக்கலேட்டைப் படைத்து வேண்டிக்கொண்டதாகவும், அதன் பிறகு அவன் குணமடைந்ததால் இந்த விசித்திர பழக்கம் தொடங்கப்பட்டதாகவும் ஒரு கதை கூறப்படுகிறது.

   

இதனால் அப்பகுதியில் உள்ள இறைவன் ‘மஞ்ச் முருகன்’ என்றே செல்லமாக அழைக்கப்படுகிறார். இது தொடர்பான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.