குஷியோ குஷி… இனி 100 நாள் வேலை இல்லை, 125 நாள் வேலை வரப்போகுது… மத்திய அரசு அதிரடி…!

Spread the love

நாட்டில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005ஆம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு வருடத்திற்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை வழங்கப்படும் என்ற உத்திரவாதத்தை இந்த திட்டம் அளிக்கின்றது. இந்தத் திட்டத்தின் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். அதில் 14.35 கோடி பேர் செயலில் உள்ள தொழிலாளர்களாக உள்ளனர். இந்நிலையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு 90% நிதியை மத்திய அரசு வழங்கி வரும் நிலையில் 60 சதவிதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நிதி பங்களிப்பு 10 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்வதால் மாநில அரசுகளுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்று தெரிகிறது. 100 நாள் வேலைக்கான பணிகளை தேர்வு செய்வதற்கான வரைமுறையை மத்திய அரசு முடிவு செய்யும் என்றும் மத்திய அரசின் வரைமுறைகளுக்கு உட்பட்டே மாநில அரசு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபதனைகள் விதிக்கப்பட உள்ளது. அது மட்டுமல்லாமல் விவசாய அறுவடை காலத்தில் 60 நாட்களுக்கு ஊரக வேலை திட்டத்தில் பணிகளை குறைக்க கூடாது என்றும் ஊரக வேலை திட்ட பணி நாட்களாக 125 நாட்களாக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

2 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

2 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

2 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

3 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

3 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

3 மணத்தியாலங்கள் ago