மறைந்த “இயக்குநர் இமயம்” பாரதிராஜாவின் திருவுடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதலமைச்சர் சி.எம். விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழ் கலைத்துறையில் அவர் ஆற்றியுள்ள ஈடு இணையற்ற பங்களிப்பையும், சாதனையையும் போற்றும் வகையில் அரசு சார்பில் இந்த இறுதிச்சடங்கு முழு மரியாதையுடன் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் போக்கையே கிராமிய வாழ்வியலை நோக்கி மாற்றிய ஒரு மாபெரும் கலைஞனுக்குச் செய்யும் மிக உயரிய கௌரவமாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பு பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர், தற்போது இந்தத் துயரமான நேரத்தில் திரையுலகின் ஒரு தூணாக விளங்கிய பாரதிராஜாவுக்கு உரிய மரியாதையை அரசு செய்யும் என உறுதி அளித்துள்ளார். இந்த அரசு மரியாதை குறித்த அறிவிப்பு, ரசிகர்களிடையேயும் திரையுலக வட்டாரத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
