“உதவிக்கு போலீசை கூப்பிட்டும் வரல” 8 வயது மகனைக் காப்பாற்றப் போன தந்தைக்கும் நேர்ந்த கதி.. நடுரோட்டில் சூழ்ந்த கஞ்சா போதை கும்பல்… சென்னையில் பயங்கர அதிர்ச்சி..!!

By Soundarya on ஆனி 10, 2026

Spread the love

சென்னையில் கஞ்சா போதை இளைஞர்கள் சிலர் தனது 8 வயது மகனுக்கு உடல் ரீதியான துன்புறுத்தல் அளித்ததாகத் தமிழ் சினிமாவின் பிரபல இணை இயக்குநர் ஒருவர் சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டியுள்ளார். தனது மகன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இருவர் சிறுவனிடம் அத்துமீறியதாகவும், அதைத் தடுக்கச் சென்ற தன்னை மேலும் ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டதாகவும் அவர் அதிர்ச்சியூட்டும் தகவலைப் பகிர்ந்துள்ளார். இந்த இக்கட்டான தருணத்தில் உயிர் பாதுகாப்பற்ற சூழல் நிலவியதாகவும், எவ்வித அசம்பாவிதமும் இன்றித் தானும் தன் மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள் தான் என்றும் அவர் தனது பதிவில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆபத்தான கட்டத்தில் அவசர உதவிக்காகக் காவல் கட்டுப்பாட்டு அறையின் ‘100’ என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டபோது, அழைப்பு எடுக்கப்பட்டு உடனடியாகத் துண்டிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஆர்-6 குமரன் நகர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ள முயன்றபோதும் அந்த எண் உபயோகத்தில் இல்லை என வந்துள்ளது. இறுதிவரை காவல்துறையின் உதவி கிடைக்கவில்லை என்ற இந்தச் சமூக வலைதளப் பதிவு பெரும் பரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சென்னை காவல்துறை இதற்குப் பதிலளித்துள்ளது. அதில், சம்பந்தப்பட்ட இணை இயக்குநரின் தொடர்பு எண்ணை நேரடிச் செய்தி மூலம் அனுப்புமாறும், தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாகச் செய்து தரப்படும் என்றும் காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.