புஷ்பா திரைப்படம் மூலமாக பான் இந்திய நடிகராக உருவெடுத்துள்ளவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. சுகுமார் இயக்கிய இந்த திரைப்படத்தில் செம்மர கடத்தல் காரராக அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாகவும் வில்லனாக பகத் பாசிலும் நடித்து அசத்தியுள்ளனர். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த படம் பக்கா கமர்சியல் படமாக இருந்தாலும் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் 10 நாட்களில் ஆயிரம் கோடி வசூல் செய்த இந்திய சினிமாவை அதிர வைத்தது. அதனைப் போலவே கே ஜி எஃப் 2, RRR, கல்கி 2898 ஏடி உள்ளிட்ட படங்கள் 16 நாட்களில் ஆயிரம் கோடி வசூல் சாதனை செய்தன. ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் மற்றும் பதான் ஆகிய திரைப்படங்களும் ஆயிரம் கோடி வசூலை ஈட்டியது. ஆனால் அதிரடியாக அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் 6 நாட்களில் ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரை துறையினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் இதுவரை சுமார் 1110 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. ஆனால் இந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிக்காட்டியும் மக்கள் மனதில் இடம் பிடித்த அள்ளு அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது தெலுங்கு ஸ்டார் மகேஷ்பாபு தானா.
)
நெகட்டிவ் கதாபாத்திரம் தனக்கு வேண்டாம் என்று கூறி அந்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டாராம். அதனைப் போலவே புஷ்பா படத்தில் கவனம் பெற்ற ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சமந்தாவிடம் தான் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் கிராமத்து பெண் வேடத்தில் நடிக்க சமந்தா மறுத்துவிட்டார். அடுத்ததாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பகத் பாஸில் ரோலில் நடிக்க முதலில் விஜய் சேதுபதி இடம் கேட்கப்பட்ட நிலையில் அவர் பிசியாக இருந்த காரணத்தால் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
