“எனக்காகவே வாழ்ந்தவர்”…. ஸ்டாலினை நிலைகுலைய வைத்த பேரதிர்ச்சி… மொத்த திமுகவையும் உலுக்கிய மறைவு….!

By Nanthini on ஆவணி 22, 2026

Spread the love

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தனி உதவியாளராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடைய நிழல் போல் உடன் இருந்த ஹரிகிருஷ்ணன் அவர்கள் மறைவெய்தியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி உள்ளிட்ட பலர் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதன் பிறகு ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “இரவு, பகல் பாராமல் எனக்கும், நமது இயக்கத்திற்கும் கண்ணும் கருத்துமாக உறுதுணையாக இருந்த தோழர் ஹரிகிருஷ்ணனை இழந்து தவிக்கிறேன்” என மிகவும் உருக்கமாகத் தன் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.