“காங்கிரஸை கழற்றிவிடுகிறதா திமுக…? லண்டனில் இருந்து ஸ்டாலின்… போட்ட அதிரடி ‘ஸ்கெட்ச்’… அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்…!!”

By Swetha on ஆடி 16, 2026

Spread the love

லண்டனில் இருந்தவாறே திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆன்லைன் வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். வரும் 20-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், தமிழக மக்களின் நலன் சார்ந்த மற்றும் மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகளை எவ்வாறு அவையில் எழுப்ப வேண்டும் என்பது குறித்து எம்பிக்களுக்கு அவர் விரிவான அறிவுறுத்தல்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளார்.

அதேவேளையில், அண்மைக்காலமாக காங்கிரஸ் கட்சியுடனான திமுகவின் உறவில் சில விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதனால், நாடாளுமன்றத்தில் பாஜகவை எதிர்த்து குரல் கொடுப்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இணையாமல், திமுக எம்பிக்கள் தனித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்வார்களா என்ற பலத்த எதிர்பார்ப்பும் தற்போது அரசியல் களத்தில் எழுந்துள்ளது.