பொதுமக்கள் லஞ்சப் புகார்களை எளிதாகத் தெரிவிப்பதற்காக அரசு அறிமுகப்படுத்திய 94981 80936 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண், செயல்பாட்டிற்கு வந்த மறுநாளே அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த எண்ணிற்கு வந்த புகார்களின் அடிப்படையில், போலி பில்லிங் மற்றும் நேரடியாக லஞ்சம் கோரிய குற்றச்சாட்டுகளுக்காக 6 அரசு ஊழியர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தற்போது துறைரீதியான விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த மின்னல் வேக நடவடிக்கை, அரசுத்துறைகளில் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் மிக முக்கியமானதொரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
ஊழலை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அதிரடித் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது லஞ்சம் வாங்குபவர்கள் மீது தயக்கமின்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதும், புகார்கள் ரகசியமாக விசாரிக்கப்படுவதும் தவறு செய்யும் அரசு ஊழியர்களிடையே தார்மீக பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற டிஜிட்டல் வழி புகார்பதிவு முறைகள், நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை நோக்கி தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
