தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகராட்சி பகுதியில் இன்று [07. 08. 2025] ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-42ல் இளையா தெருவில் உள்ள கே.சி.எஸ். நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராயபுரம் மண்டலம், வார்டு -51ல் காளிங்கராயன் தெருவில் உள்ள அண்ணா திருமண மண்டபம், திரு.வி.க நகர் மண்டலம், வார்டு-73ல் ஸ்டாரஹன்ஸ் சாலையில் உள்ள திரு.வி.க நகர் மண்டல அலுவலகம், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-120ல் வி.பி. ராமன் சாலை, லாயட்ஸ் காலனியில் உள்ள ஐ.டி.ஐ கல்லூரி, அடையாறு மண்டலம், வார்டு-172ல் நெடுஞ்செழியன் தெருவில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி விளையாட்டு திடல், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-200 செம்மஞ்சேரி, பழத்தோட்டச் சாலையில் உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெற உள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் ஸ்டாலின் முகாமில், பங்கேற்று பயன்பெறலாம்
