மகாராஷ்டிரா மாநிலம் ஹிமாயத் நகரை சேர்ந்தவர் ஷேக் நஜீம். 45 வயதான இவர் கூலி தொழிலாளியாக உள்ளார். இவர் கடந்த 10 வருடத்திற்கு முன்பு மனைவி, மகன் மற்றும் மாமியாரோடு வேறு ஒரு கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக நஜீமின் மனைவி தன்னுடைய மகனுடன் மகாராஷ்டிரா மாநிலம் ஷிவானிக்கு சென்றுள்ளார். இதனால் அவருடைய மாமியார் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஷேக் நிஜின் தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய 70 வயது மாமியாரை பாலியல் கொடுமை செய்துள்ளார். இதனால் உடல்நிலை நஜீமின் மாமியார் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினமும் இரவு மீண்டும் மதுபோதையில் வீட்டிற்கு வந்த நஜீம் மீண்டும் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது மாமியார் அருகில் கிடந்த கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
