விஜய் போடும் மாஸ்டர் பிளான்.. பக்காவாக காய் நகர்த்தும் தளபதி… குழப்பத்தில் ஸ்டாலின், இபிஎஸ்..!

By Nanthini on ஆடி 10, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஒரு பக்கம் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்க மறுப்பாக்கம் ஈபிஎஸ் இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றார். இவர்கள் இருவருக்கும் போட்டியாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார். தமிழகத்திற்கு புதிய ஆட்சியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே இரண்டு கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கம் என அதிமுக சொல்கிறது. 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என திமுக பணியாற்றி வருகிறது. இந்த வரிசையில் தற்போது விஜய்யும் இணைந்துள்ளார். ஜூலை 15ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கைக்காக செயலியை அறிமுகம் செய்யும் விஜய் 2 கோடி தொண்டர்களை இணைக்க உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே வீட்டிற்கு ஒருவரை தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைக்குமாறு அவர் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் போட்டு உள்ள மெகா பிளான் அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.