அதிமுகவுக்கு வழிவிடும் ஸ்டாலின்?…. “வேண்டவே வேண்டாம்” என மறுத்த உதயநிதி…. அறிவாலயத்தில் பரபரப்பு….!

By Nanthini on புரட்டாதி 8, 2026

Spread the love

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போட்டியில் இருந்து விலகி நிற்பதே சரியான உத்தி என திமுக தலைமை தீவிரமாக பரிசீலித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. இந்தத் தேர்தலில் திமுக போட்டியிட்டு மும்முனைப் போட்டி உருவாகும் பட்சத்தில், அது ஆளும் தரப்பான தமிழக வெற்றிக் கழகத்திற்கே சாதகமாக முடிந்துவிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருதுவதாகவும், எனவே அதிமுகவுக்கு வழிவிட்டு விலகியிருப்பதே தந்திரோபாய ரீதியாகச் சரியானது என மூத்த நிர்வாகிகளிடம் அவர் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், ஆளும் கட்சியை எதிர்த்து நிற்காமல் தேர்தல் களத்தில் இருந்தே ஒதுங்குவது தொண்டர்களின் நம்பிக்கையை சீர்குலைப்ப தோடு, அரசியல் ரீதியாகவும் பலவீனமான பிம்பத்தை உருவாக்கிவிடும் என உதயநிதி ஸ்டாலின் கருதுவதால், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் அவர் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். தலைவரின் வியூகத்திற்கும் இளம்தலைவரின் அடியொற்றி களமிறங்கும் விருப்பத்திற்கும் இடையே நிலவும் இந்த முரண்பாடு, தற்போது அறிவாலயத்தில் பெரும் காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.