விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நகர்வுகள் திமுகவினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஸ்டாலின் விரைவில் சட்டப்பேரவைக்குள் நுழைவார் என்று கே.என்.நேரு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அண்மையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “எங்கே அப்பாவை காணோம்” என்று முதலவர் விஜய் எழுப்பிய கேள்முன்னாள் வியும், அவர் காண்பித்த சைகையும் திமுக தொண்டர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு, மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, நேரடியாகச் சட்டமன்றத்திற்குள் வந்து பொறுப்பேற்பது மட்டுமே தகுந்த பதிலாக இருக்கும் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு, வரும் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் களம் காண்பதை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளதால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
