தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திலிருந்து அண்ணா அறிவாலயத்திற்குப் புறப்பட்டுச் சென்ற அவர், அங்கு கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் தனது உரையை முடித்த பின், மு.க.ஸ்டாலின் அங்கிருந்து நேரடியாகக் கவர்னர் மாளிகைக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். அங்கு ஆளுநரைச் சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து, முறைப்படி முதல்வர் பதவியிலிருந்து விலக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி அரசியல் நகர்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
