தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கி திமுக பயணித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தன் கூட்டணி பலமாக இருந்தாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவது மட்டுமல்லாமல் தனது கட்சியிலும் சில களை எடுப்பு பணிகளை முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மீது முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகவும் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க உள்ளதாகவும் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது. நேற்று மதுரை மஞ்சமேடு பகுதியில் சாக்கடை கால்வாய் பிரச்சினையின் போது, தான் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்த போதே சிறப்பாக இருந்தது. தற்போது அமைச்சராக இருந்தும் பிரச்சனை ஏற்படுவது ஏன் என அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதம் செய்ததே காரணம் என்று கூறப்படுகிறது. இது தற்போது திமுகவில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
