உலகப் புகழ்பெற்ற ஃபேஷன் பிராண்டான Prada என்ற நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஒரு சேஃப்டி பின் விலை குறித்த செய்தி வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாம் பொதுவாகவே சேஃப்டி பின்னை குறைந்த விலையில் தான் வாங்குவோம். இதே பொருளை வெறும் இரண்டு ரூபாய்க்கு பெட்டி கடையில் வாங்கி விடலாம் என்று தான் நினைப்போம்.
ஆனால் தற்போது இந்த சிறிய பொருளின் விலை 69 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சேஃப்டி பின், ஒரு சாதாரண உலோக ஊசியாக இல்லாமல் நூல்களால் பின்னப்பட்ட அணிகலனாக மாறியுள்ளது. இந்த மெட்டல் சேஃப்டி பின் ப்ரூச் (Metal Safety Pin Brooch) ஆரஞ்சு, வெளிர் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது.
இந்த விலையை கேட்ட நெட்டிசன்கள் பலரும் எல்லாம் ஓரளவுக்கு தான் Bro என்று மீம்களை பகிர்ந்து இந்த புதிய ஃபேஷன் பொருளை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகிறார்கள். இந்தச் செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
