பெரும் பரபரப்பு..! கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி முகம்… முன்னேறும் தவெக வேட்பாளர்..!!

By Soundarya on வைகாசி 4, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இரண்டாம் சுற்று முடிவில், திமுக தலைவரைப் பின்னுக்குத் தள்ளி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் வி.எஸ். பாபு 8,393 வாக்குகளைப் பெற்றுத் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். மு.க.ஸ்டாலின் 7,159 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இந்தத் திடீர் மாற்றத்தால் திமுகவினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதே தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணன் 2,226 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். முதலமைச்சர் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரங்களில் மிக முக்கியமான விவாதமாக மாறியுள்ளது.