இதெல்லாம் ஒரு பொழப்பா?…. வட மாநிலங்களில் டள்பதி ரீல்ஸ்.. பண்ணையார் மாதிரி பட்டு வேட்டி சட்டை….. மேடையிலேயே கிழித்து தொங்கவிட்ட ஸ்டாலின்….!

By Nanthini on ஐப்பசி 3, 2026

Spread the love

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், திமுக வேட்பாளர்களின் வெற்றிக்காகக் கட்சியினர் முழு வீச்சில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இப்பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தமிழக வெற்றி கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய் தரப்பில் பரப்பப்படும் போலி பரப்புரைகளைக் கடுமையாகச் சாடினார். “வட மாநிலங்களில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து, ‘டளபதி விஜய்’ என விதவிதமாகப் பொய் செய்திகளையும் ரீல்ஸ்களையும் பரப்பத் தொடங்கியுள்ளனர். வட மாநிலங்களில் தவெக சார்பாக வெளியிடப்படும் இத்தகைய ரீல்ஸ்கள் மூலம், இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் விஜய் அடுத்த பிரதமருக்கான ரேஸில் 9.1% ஆதரவுடன் 3-வது இடத்தை பிடித்ததாகப் போலி பிம்பத்தைக் கட்டமைக்க முயல்கின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.

   

தொடர்ந்து பேசிய அவர், “பெண்கள் பாதுகாப்புக்காக ஒவ்வொரு தெருவிலும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் மற்ற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டைப் பற்றி என்ன நினைப்பார்கள்? மக்களிடம் சொல்வதற்கு எந்தவித சாதனைகளும் இல்லாத காரணத்தால் தான் இதுபோன்ற ரீல்ஸ் அரசியலை கையில் எடுத்துள்ளனர். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு, இப்போது நிஜத்திலும் மக்கள் முன்பாக நடிக்கத் தொடங்கிவிட்டார்கள்” எனத் தவெக தரப்பைக் கடுமையாக விமர்சித்தார்.

   

மேலும், காவிரி விவகாரம், விவசாயிகள் பிரச்சனை மற்றும் மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகளில் தவெக தெளிவான நிலைப் பாடின்றி மௌனம் காப்பதாகச் சாடினார். குறுவை சிறப்புத் தொகுப்பிற்கும் வறட்சி நிவாரணத்திற்கும் உள்ள வித்தியாசத்தைக் கூடப் புரிந்து கொள்ளாமல் சிலர் பேசி வருவதாகவும், அவர்கள் கொஞ்சம் பேப்பரைப் படித்து விபரங்களைத் தெரிந்து கொண்டு மக்கள் முன் வர வேண்டும் என்றும் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.