“அவங்க எப்படி ஜெயிச்சாங்கன்னு.. எங்களுக்கு தான் தெரியும்”… விஜயை நேரடியாக அட்டாக் செய்த ஸ்டாலின்…!

Spread the love

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவின் கதை முடிந்துவிட்டது என்று நம்முடைய இன எதிரிகள் சூழ்ச்சி செய்து கவிதை பாடி வருவதாகக் குறிப்பிட்டார். 1949-ல் தொடங்கப்பட்ட திமுக, எத்தனையோ தேர்தல்களில் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ளது என்றும், தோல்வி அடையும் நேரத்தில்தான் திமுக எப்போதும் ஒரு ‘பீனிக்ஸ் பறவை’ போல மீண்டும் கிளம்பி எழும் என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்கள் மத்தியில் எந்தப் பணியும் செய்யாமல், பூத் ஏஜென்ட்களைக் கூட நியமிக்காமல் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) சமூக ஊடகங்கள் மூலம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளதாக விமர்சித்தார். குறிப்பாக, இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்தி சிறு பிள்ளைகள் மற்றும் குழந்தைகளை வைத்து தவெக திட்டமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதாகவும், அக்குழந்தைகள் மூலம் அவர்களின் பெற்றோர் மற்றும் பெரியவர்களின் வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சமூக ஊடக உத்தி தங்களின் கணக்குக்குத் தெரியாமல் போய்விட்டதாக ஒப்பக்கொண்ட ஸ்டாலின், இனிமேல் திமுகவினர் உஷாராக இருந்து அதனை முறியடிக்கத் திட்டமிட்டு வருவதாகக் கூறினார். மேலும், தொண்டர்கள் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை என்றும், ஐந்து ஆண்டு கால திட்டப் பணிகள் தடைபட்டிருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்காகத் தொடர்ந்து போராடி மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையோடு பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Swetha

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்…! பாதுகாப்பு துறையில் 1,871 காலி பணியிடங்கள்… ரூ.1,00,000 வரை சம்பளம்…. மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க..!!

பாதுகாப்புத் துறையில் அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தியாக, பணியாளர் தேர்வாணையம் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லி…

3 minutes ago

“பாஜக பக்கம் சாஞ்சிட்டாரா விஜய்?”…. மோடிக்கு கொடுத்த ‘சர்டிபிகேட்…. அதிர்ச்சியில் ராகுல் காந்தி…. ஆட்டங்காணும் தமிழக அரசியல்…!

செப்டம்பர் 17 ஆம் தேதி தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரின் பிறந்தநாளாக அமைவது தமிழக அரசியலில்…

3 minutes ago

அய்யய்யோ… 13 மில்லியன் ஃபாலோயர்கள் கொண்ட… பிரபல இன்ஃப்ளூயன்ஸருக்கு நேர்ந்த அதிர்ச்சி… விளம்பரப் படப்பிடிப்பில் செய்த துரோகம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

சோஷியல் மீடியா உலகில் 13 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டு பிரபலமான ராஜஸ்தானைச் சேர்ந்த இன்ஃப்ளூயன்ஸர் திஜாரா வைன்ஸ் , அண்மையில்…

5 minutes ago

“விஜய்யின் அரசியல் பிம்பத்தை உடைக்க மாஸ் பிளான்”…. திமுக இறக்கிய ‘ரகசிய’ ஃபார்முலா… இடைத்தேர்தலில் உதயநிதி போட்ட ‘ஸ்கெட்ச்’…..!

தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே…

8 minutes ago

“முதலமைச்சர் 3 நாள் வாய்தா வாங்கிட்டாரு”…. “சொரணை வந்துடுச்சா?”…. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆர்.எஸ். பாரதி….!

சென்னைப் பெரம்பூரில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பேச்சைக் கண்டித்து…

14 minutes ago

அட கடவுளே… காதல் பெண்ணைக் கடத்த முயன்ற ராஜஸ்தான் இளைஞர்கள்… காரை நொறுக்கித் தர்ம அடி கொடுத்த மக்கள்… பெங்களூருவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!!

பெங்களூரு மகடி சாலையில் 22 வயது பெண் கடத்தப்படுவதாகச் சந்தேகமடைந்த தெருவிலிருந்த மக்கள் கும்பல், ராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைக்…

15 minutes ago