தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகளைத் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பள்ளிகள் திறப்பை ஜூன் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த உயர்நிலைக் கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், துறையின் செயலாளர் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனையின் போது, வெயிலின் தீவிரத்திற்கு ஏற்ப எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், நாளை மறுதினம் வெளியாகவுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் விஜய் கேட்டறிந்து அதிகாரிகளுக்குத் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்; இதனால் பள்ளிகள் திறப்புத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள இகோ வில்லேஜ் 2 குடியிருப்பு வளாகத்தில், நவீன் பஸ்வான் என்ற வாடகைதாரர் தனது காரை பார்க்கிங்…
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில், கட்டுமான தள மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த 40 வயது நபர் ஒருவர், கடுமையான நிதி…
தலைநகர் டெல்லியின் திக்ரி பகுதியில், வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் சமைப்பது தொடர்பாகக் கணவன் கமலேஷிற்கும், அவரது 31 வயதான…
மகாராஷ்டிர மாநிலம் புனே நர்ஹே பகுதியில் உள்ள பூம்கர் பாலத்தில், அதிவேகமாக வந்த லாரி ஒன்றின் பிரேக் திடீரென செயலிழந்ததால்…
மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…