“கயிறு எங்கே?.. 130 அடி உயரத்தில் இருந்து இளம்பெண்ணைத் தூக்கி வீசிய ஊழியர்கள்… காதலன் கண்முன்னே நடந்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ”..!!

By Muthu Mani on ஆனி 14, 2026

Spread the love

ஊழியர்களின் அலட்சியத்தால் ஜம்பிங் செய்யப்போன காதலன் கண் முன்னாடியே 21 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் நாட்டின் சாவோ பாலோ மாகாணத்தில் உள்ள ஸ்கெலட்டன் பாலத்தில், தனது காதலனுடன் சுற்றுலா சென்ற மரியா எடுவார்டா ரோட்ரிக்ஸ் டி ப்ரீடாஸ் என்ற இளம்பெண் பங்கி ஜம்பிங் செய்ய முயன்றபோது ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பங்கி ஜம்பிங் செய்யத் தயாரான மரியாவுக்கு ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை மாட்டிய ஊழியர்கள், உடம்பில் முக்கியப் பாதுகாப்பு கயிறைக் கட்டாமலேயே 130 அடி உயரத்தில் இருந்து கீழே தள்ளியுள்ளனர்.

A 21-year-old woman died during a 40-meter rope jump in Limeira, Brazil, after organizers forgot to attach the safety rope.pic.twitter.com/ECloIDRf2j— Clash Report (@clashreport) June 13, 2026

   

இதில் நிலைதடுமாறி நேராக கீழே விழுந்த அந்த இளம்பெண் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். மரியாவின் காதலன் கண் முன்னாடியே நடந்த இந்த கோர சம்பவத்தின் போது, அவர் கீழே விழுந்த பின் அங்கிருந்தவர்கள் “கயிறு எங்கே?” என்று பதற்றத்துடன் அலறும் சத்தம் பதிவான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அந்நாட்டு போலீசார், பாதுகாப்பு குறைபாட்டிற்கு காரணமான 6 ஊழியர்களைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காதலி பலியான அதிர்ச்சியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மரியாவின் காதலன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.