மீனாவிற்கு உதவி செய்யும் ஸ்ருதி… சண்டையிடும் விஜயா… சிறகடிக்க ஆசையில் இன்று…

By Meena on பிப்ரவரி 7, 2025

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் மீனாவுக்கு புதிய ஆர்டர் கிடைக்கிறது. அதுக்கு அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது. பணத்திற்கு என்ன செய்யலாம் ரவி சுருதியிடம் கேட்கலாமா என்று முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

   

இன்றைய எபிசோடில் ரூமுக்குள்ளே ரவியும் ஸ்ருதியும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது முத்துவும் மீனாவும் அவங்க ரூமுக்கு வந்து தனக்கு கிடைத்த ஆர்டர் பற்றியும் கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது என்று தயங்கி தயங்கி கூறுகிறார் மீனா. உடனே இதுக்கு ஏன் இவ்ளோ தயங்குறீங்க மீனா என்கிட்ட பணம் இருக்கு நான் தரேன் என்று கொடுக்கிறார். உடனே ரவி நானும் என் அண்ணிக்கு ஹெல்ப் பண்ண கூடாதா நானும் தரேன் என்று கூறுகிறார். இதை பார்த்த முத்துவும் மீனாவும் ரொம்ப சந்தோஷம் அடைந்து நன்றி உங்க ரெண்டு பேருக்கும் நீங்களே இப்பதான் நிறைய செலவு பண்ணி இருக்கீங்க இருந்தாலும் எங்களுக்கு உதவி செய்றீங்க என்று கூறுகின்றனர்.

   

உடனே ரவி முத்துவிடம் நான் படிக்கும் போது நீ எனக்காக எவ்வளவு செலவு பண்ணி இருக்க என்று கூறுகிறார். அதே போல் சுருதி வீட்ல நம்ம எல்லாரும் ஒன்னா இருக்கோம். ஒருத்தருக்கு உதவி தேவைப்படும்போது நம்ம ஹெல்ப் பண்றது ஒன்னும் தப்பு இல்ல நீங்க பிரிச்சு பாக்காதீங்க என்று கூறுகின்றனர்.

 

அதற்கு அடுத்ததாக மீனாவுக்கு தொழில் போட்டியாக இருக்கும் அந்த பெண்மணி விஜயாவிடம் பரதநாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு போன் வருகிறது. ஒரு பெரிய ஆர்டரை மீனாவுக்கு கொடுத்துட்டாங்க என்று கூறுகின்றனர். அப்போது அந்த பெண்மணி கோபப்பட்டு விஜயாவிடம் பத்தி வைக்கிறார். உங்களைப்பற்றி தப்பு தப்பாக மீனா என்கிட்ட சொன்னா இப்போ ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு அது அவளை செய்ய விடாமல் பண்ணிட்டா அவா பேசாம இருப்பா என்று ஐடியா கொடுக்கிறார்.

அதை கேட்டு வீட்டில் வந்து விஜயா தேவையில்லாமல் பிரச்சனை செய்து நீ என்ன பத்தி சொல்லி இருக்க ஊர்ல எல்லாம் தப்பா பேசுற என்று விஜயா சண்டையிடுகிறார். மீனா நான் அப்படி எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். அண்ணாமலையும் மீனாவுக்கு சப்போர்ட் செய்கிறார். அடுத்ததாக அந்த பெண்மணி விஜயாவுக்கு போன் செய்து உங்களுக்கு ஞாபகம் இருக்கு இல்ல நாளைக்கு மீனாவை வீட்டை விட்டு வெளியே போக விடாதீங்க ஆர்டர் பண்ண கூடாது என்று கூறுகிறார். உடனே விஜயாவும் மீனாவை எப்படி தடுக்கலாம் என்று யோசிக்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.