BREAKING: திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமான முக்கிய புள்ளி… அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

By Soundarya on சித்திரை 5, 2026

Spread the love

திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் மற்றும் தனியரசு ஆகியோர் ஏற்கனவே விலகியிருந்த நிலையில், தற்போது மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரும் அக்கூட்டணியில் இருந்து விலகியுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் தங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என திமுக தலைமையிடம் அவர் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு உடன்பாடு ஏற்படாததால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஸ்ரீதர் வாண்டையார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அக்கட்சிக் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அடுத்தடுத்து சிறிய கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக பக்கம் சாய்வது அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.