தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் ஸ்ரீதர். இவர் எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார். கடந்த 1967-ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் நெஞ்சிருக்கும் வரை திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் இருக்கும் அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் தான் எழுதியுள்ளார்.
ஆனால் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை மற்றும் வாலி எழுதியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் முத்துக்களோ கண்கள் என்ற பாடலின் வரிகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. இந்த பாடலில் சிவாஜி கணேசன் மேக்கப் இல்லாமல் நடித்திருப்பார்.
இந்த பாட்டை ரெக்கார்ட் செய்யும் போது ஸ்ரீதர் அந்த இடத்தில் காதலை இரண்டே வரிகளில் சொல்ல வேண்டும் என கண்ணதாசனுக்கு கண்டிஷன் போட்டுள்ளார். அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காத கண்ணதாசன் முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் என சொல்லி வரி எழுதியுள்ளார். முதல் வரியை கேட்ட ஸ்ரீதர் என்ன இப்படி சொல்லிட்டாரே என பிடிக்காத மாதிரி ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.
அடுத்த வரியிலேயே கண்ணதாசன் சந்தித்த வேளையில் சிந்திக்கவில்லை.. தந்துவிட்டேன் என்னை என அடுத்து இரண்டு வரிகளை கூறியுள்ளார். இதனைக் கேட்டு ஸ்ரீதர் மிகவும் சந்தோசம் அடைந்தார். இதற்கிடையே அருகே உட்கார்ந்திருந்த கண்ணதாசனின் உதவியாளர் மதுரை ஜி.எஸ் மணி அவர்கள் அந்த வரிகளை கேட்டு கண்ணதாசன் காலில் விழுந்து விட்டார். இந்த தகவலை கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன் ஒரு பெட்டியில் கூறியுள்ளார்.