நடிகையான சாக்ஷி அகர்வால் விசுவாசம், ராஜா ராணி, காலா உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல்வேறு திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு சாக்ஷி பிரபலமானார். அதன் பிறகு டெடி, அரண்மனை 3, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரெல்லா, கெஸ்ட் சாப்ட்வேர், தி நைட்டு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. தற்போது ஐந்து படங்களுக்கும் மேலாக சாட்சி கமிட் ஆகியுள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் விதவிதமான போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை பதிவிடுவார்.
அவரது புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது கருப்பு நிற டிரான்ஸ்பரன்ட் சேலையில் ஷாக்ஷி பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.