அந்த சந்தோசம் கொஞ்ச நேரம் கூட நீடிக்கல… “அப்பா இறந்துட்டாரு” ஆசிய கோப்பை போட்டி முடிந்ததும் இலங்கை வீரருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

By Soundarya on புரட்டாதி 19, 2025

Spread the love

17 ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் சுற்றில் இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இலங்கை அணி சூப்பர்4 சுற்றுக்கு ஆப்கானிஸ்தானை வெளியேற்றி தகுதி பெற்றது. இலங்கை அணி தகுதி பெற்றதையடுத்து வீரர்கள் உற்சாகத்தோடு மகிழ்ச்சியில் இருந்தார்கள். அந்த நேரத்தில் இலங்கை வீரர்  துணித் வெல்லாலகேவின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த தகவல் அறிந்து அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள்.

தந்தை இறந்த செய்தி தெரியவர கண் கலங்கியபடி ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றுள்ளார் துணித். இதனையடுத்து சக வீரர்கள் அவரை ஆறுதல் படுத்தியுள்ளார்கள் . இதனை அடுத்து துணித் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் இவர் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இன்னும் இலங்கையானது குறைந்தது மூன்று போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.