தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், ” தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்த காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்தோடு காணப்படும் என்று தெரிவித்துள்ளது.
