“ஒரு ஈழத்தமிழனாக வெட்கப்படுகிறேன்” உங்க வீடு எங்க இருக்கு சொல்லுங்க..? நான் அங்க வந்து… சங்கீதாவை கிழித்தெடுத்த இலங்கை எம்பி..!!

By Soundarya on பங்குனி 9, 2026

Spread the love

விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து இலங்கை எம்.பி. அர்ச்சுனா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், விஜய் தனது அரசியல் பயணத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது, சங்கீதா  காலை வாரி விட்டார். நீங்க யாழ்ப்பாணத்தில் எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க அங்க வந்து மாலை போட்டு கோவில் கட்டுறேன். எப்படிப்பட்ட இனப்பிறப்பு என்று யோசித்து பாருங்க. இதுக்கு மேல எனக்கு சொல்ல தெரியல என்று குற்றம் சாட்டியுள்ளார். “யாழ்ப்பாணத் தமிழனாக சங்கீதாவை நினைத்து வெட்கப்படுகிறேன்” என்று அவர் ஆவேசமாகப் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சங்கீதா அண்மையில் தாக்கல் செய்த புதிய மனுவில், தமக்குச் சென்னையில் தனியாக வீடு இல்லை என்றும், விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிலேயே தங்கியிருக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். விஜய்யின் வழக்கறிஞர் தன்னை மிரட்டுவதாகவும், வீட்டில் தங்க அனுமதிக்க மறுப்பதாகவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடியாகவே இலங்கை எம்.பி., விஜய்யின் வளர்ச்சியைத் தடுக்க சங்கீதா முயற்சிப்பதாகக் கூறி அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

   

மறுபுறம், இந்த விவகாரத்தில் சங்கீதாவுக்கு ஆதரவாகவும் கருத்துகள் எழுந்துள்ளன. அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் போன்றோர், சங்கீதாவுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்கள் நடத்தும் “டிஜிட்டல் வன்முறை” மற்றும் ஆபாசத் தாக்குதல்களைக் கண்டித்துள்ளனர். விவாகரத்து என்பது ஒரு தனிப்பட்ட சட்ட ரீதியான உரிமை என்றும், அதனை அரசியலோடு இணைத்து ஒரு பெண்ணை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.