விஜய்க்குத் துணை முதல்வர் பதவி..? கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் பாஜக… உண்மையை உடைத்த நயினார் நாகேந்திரன்…!!

By Soundarya on பங்குனி 9, 2026

Spread the love

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமாறு தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் நடிகர் விஜய்க்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் அனைத்தும் “முழுக்க முழுக்க வதந்தி” என்று அவர் மறுத்துள்ளார். விஜய்யின் அரசியல் புரிதல் குறித்து விமர்சித்த அவர், கூட்டணி குறித்த முடிவுகளைக் கட்சியின் மேலிடமே எடுக்கும் என்றும், தற்போது வரை அத்தகைய சூழல் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். “தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான்” என்று குறிப்பிட்ட அவர், திமுக அரசை வீழ்த்த அதிமுக – பாஜக கூட்டணி உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார். விஜய்யின் அரசியல் வருகை இந்தக் கூட்டணியில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.