“வேலை செய்யலையா?”…. அதிமுகவில் தலைகீழ் மாற்றம்…. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொன்ன உண்மை தகவல்….!

By Nanthini on ஐப்பசி 13, 2026

Spread the love

இடைத்தேர்தல் தோல்வி அல்லது கட்சி சார்ந்த உட்கட்சி விவகாரங்கள் குறித்துப் பரவி வரும் வதடிகளுக்கு அதிமுக தலைமை முற்றுப்புள்ளி வைக்க முயன்று வருகிறது. அந்த வகையில், இடைத்தேர்தல் பணிகளில் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் தீவிரமாகப் பணியாற்றவில்லை என்பதில் எந்த உண்மையும் இல்லை என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் இருவரும் தேர்தல் களத்தில் பணியாற்றவில்லை என்ற எந்தவொரு அதிகாரப்பூர்வ புகாரும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வரவில்லை என்றும் அவர் ஒரு தனியார் இதழுக்கு அளித்த பேட்டியில் திட்டவட்டமாக விளக்கியுள்ளார்.

தற்போதைய சூழலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சியின் உட்சக்கட்ட ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பினர் போர்க்கொடி தூக்கத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களுக்கு மத்தியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் இந்தக் கருத்து அரசியல் அரங்கில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் மீது எழும் இது போன்ற விமர்சனங்கள் அடிப்படையற்றவை என்றும், அதிமுக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் கொறடா தரப்பில் முன்வைக்கப்படும் இந்தக் கருத்துக்கள் கட்சிக்குள் நிலவும் சலசலப்புகளைத் தணிக்கும் முயற்சியாகப்பார்க்கப்படுகிறது.