திக் திக் நிமிடங்கள்… கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து வந்த காளை… திருவிழாவில் பார்வையாளர் துடிதுடித்து உயிரிழப்பு… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

By Swetha on கார்த்திகை 16, 2026

Spread the love

ஷிகாரிபுரா தாலுகாவில் உள்ள சுருசுகுண்டி கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய ‘ஹோரி ஹப்பா’ நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, காளை முட்டியதில் அருண் (48) என்ற நபர் உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த இந்தத் துயரச் சம்பவம் சற்று தாமதமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருவிழாவைக் காணச் சென்ற அருணை, போட்டியில் பங்கேற்ற காளை ஒன்று திடீரெனத் தாக்கி முட்டியதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்; இது தொடர்பாக ஷிகாரிபுரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

   

https://twitter.com/HateDetectors/status/2122228165951279413/video/1

   

முன்னதாக வியாழக்கிழமையன்று, இதே தாலுகாவிற்கு உட்பட்ட கல்மனே கிராமத்தில் தன் வீட்டு வாசலில் நின்று ஹோரி ஹப்பா போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த ஈரப்பா (84) என்ற முதியவரும் காளை முட்டி உயிரிழந்தார். குறுகிய கால இடைவெளியில் நிகழ்ந்துள்ள இந்த இரண்டு உயிரிழப்புகளும், பாரம்பரிய எருது அடக்கும் நிகழ்வுகளின் போது பார்வையாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளன.