தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கார்டுக்கும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே கிளம்புங்க…..!

By Nanthini on புரட்டாதி 19, 2026

Spread the love

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19) மாநிலம் தழுவிய அளவில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இம்முகாமில், பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையை எடுத்துச் சென்று விவரங்களை எளிதாகப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

பொதுமக்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் சிறப்பு முகாம், இடைத்தேர்தல் நடைமுறையில் உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய பகுதிகளைத் தவிர்த்து மாநிலத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.