தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பள்ளி நேரம் முடிந்த பிறகு சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. தீபாவளி விடுமுறைக்கு பிறகு இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
