வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தங்கள் செய்ய இன்று மற்றும் நாளை சென்னையில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறுகிறது. சென்னையில் உள்ள அனைத்து 16 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் (Polling Stations) இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.
2026 ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைபவர்கள் மற்றும் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் புதிய வாக்காளராகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். புதிய வாக்காளர் சேர்க்கை மற்றும் விடுபட்ட பெயர்களைச் சேர்க்கலாம்.பெயர் நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் அல்லது இதர திருத்தங்களை மேற்கொள்ளலாம். வயதுச் சான்று மற்றும் இருப்பிடச் சான்றுக்கான ஆவணங்கள் (ஆதார், பான் கார்டு, பிறப்புச் சான்றிதழ் போன்றவை) மற்றும் புகைப்படங்கள் தேவைப்படும். முகாமிற்குச் செல்ல இயலாதவர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் அல்லது Voter Helpline கைபேசி செயலி மூலமாகவும் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
