நடிக்க வந்த ஆரம்பத்திலேயே இப்படியா? நான் ரொம்பவும் பயந்து போயிட்டேன் – ஓபனாக சொன்ன நடிகை ருக்மணி வசந்த்!

By Elango on மார்கழி 20, 2025

Spread the love

மதராஸி, காந்தாரா சாப்டர் 1 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பாராட்டை பெற்றவர் நடிகை ருக்மணி வசந்த். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் கூறியதாவது, என்னுடைய சினிமா பயணத்தில் ஆரம்பத்திலேயே வில்லி கேரக்டரில் நடிப்பது மிகப்பெரிய அழுத்தத்தை எனக்கு கொடுத்தது. மக்கள் என்னை மென்மையான கதாபாத்திரங்களில் பார்த்து பழகியதால் இந்த மாற்றம் என் எதிர்கால வாய்ப்புகளை பாதிக்குமோ என்ற கவலையும் பயமும் எனக்கு ஏற்பட்டது.

இனி வாழ்நாள் முழுவதும் வில்லி கேரக்டர் தான் கிடைக்குமா? என்றெல்லாம் எனக்கு தோன்றியது. நல்ல பெண் என்ற பிம்பத்தை தாண்டி வெளியே வருவது சவாலாக இருந்தது. ஆனால் காந்தாரா படம் ரிலீஸ்க்கு பிறகு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் எனது பயத்தை போக்கியது. ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டுவது எனக்கு நிம்மதி அளிக்கிறது என்று ருக்மணி வசந்த் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.