Categories: CINEMA

‘காந்த குரல்’ பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியனின் மகளா இவர்?… அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாரா?…

பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமைகளோடு வலம் வந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் கின்னஸ் சாதனை, பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்பட பல தேசிய விருதுகள்  பெற்ற பன்மொழி பல்துறை வித்தகர்.

இவர் தனது இசை ஆர்வத்தை இளம் வயதிலேயே வளர்த்து தன் தந்தை வாசிக்கும் பொழுது கவனித்து கற்று, இசைக்கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். 1960 இல் தமிழ் திரை இசை உலகில் அறிமுகமான எஸ் பி பாலசுப்ரமணியம் 50 ஆண்டுகளை தாண்டி திரையுலகில் தனது திறமையினால் உச்சத்தை தொட்டவர்.

இவர் தமிழில் முதலில் பாடியது மெல்லிசை மன்னர் எம் எஸ் வி இசையில், எல் ஆர் ஈஸ்வரியோடு இணைந்து ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு’ என்ற பாடல் தான். இதைத் தொடர்ந்து சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தில் ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ என்ற பாடலை பாடினார்.

இதை தொடர்ந்து இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியது. உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களை பாடியதற்காக உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார். பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த இவர் 2020ல் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25ல் காலமானார்.

எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி தற்போதைய நடிகர்களான விஜய், அஜித் வரை பாடல்களை பாடி அசத்தியவர் எஸ்பிபி. இவர் இறுதியாக ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மரண மாஸ்’ என்ற பாடலை பாடியதும் குறிப்பிடத்தக்கது.

எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவரது மகன் எஸ் பி சரண் தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டுள்ளார்.

ஆனால் இவரது மகள் இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டது கிடையாது. இவரது புகைப்படமும் இணையத்தில் அவ்வளவாக வெளியானது கிடையாது.  தற்போது இவர் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முதல் முறையாக கலந்து கொள்ள உள்ளார்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

Begam

Recent Posts

ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷ்புவின் கன்னத்தை பிடித்து பிரபு சொன்ன விஷயம்.. பிரபுவா அப்படி சொன்னாரு..? அது இன்னைக்கு வரைக்கும் மாறவே இல்ல..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

13 நிமிடங்கள் ago

உண்மைய சொல்லாம என்ன ஏமாத்திட்டீங்க… சுப்ரமணியபுரம் ஷூட்டிங்கில் சசிகுமாரிடம் அழுத ஸ்வாதி- அப்படி என்ன மறைத்தார் தெரியுமா?

2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…

1 மணி நேரம் ago

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

2 மணி நேரங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

4 மணி நேரங்கள் ago

நீச்சல் குளத்தில் இருந்த படி புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…

4 மணி நேரங்கள் ago

ஒரு போட்டோ கூட இன்ஸ்டால போட விட மாட்டாரு.. லேடிஸ்க்கு சினிமா எதுக்குன்னு திட்டுவாரு.. தந்தை KS ரவிக்குமார் குறித்து பேசிய மகள்..!

எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…

5 மணி நேரங்கள் ago