இனி தேவையில்லாத போன், SMS எதுவும் உங்களுக்கு வராது.. எல்லா தொந்தரவுக்கும் முற்றுப்புள்ளி.. புதிய வசதி அறிமுகம்..!

By Nanthini on ஆனி 22, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. அப்படி செல்போன் இருக்கும் அனைவருமே தேவையில்லாத அழைப்புகள் வருவதை பெரும்பாலும் விரும்ப மாட்டோம். நான் முக்கியமான வேலையில் இருக்கும்போது தொடர்ந்து ரிங் ஆகும் செல்போனை ஓடி சென்று எடுத்தால் மறுபக்கம் கடன் வேண்டுமா என்று கேள்வி கேட்டு தொந்தரவு செய்யும் பெண் உங்களை இனிமேல் எந்த தொந்தரவும் செய்யமாட்டார். அதனைப் போலவே இரவில் வேலையை முடித்துவிட்டு அசதியாக தூங்கும் போது போன் செய்து எழுப்பி கிரெடிட் கார்டு வேண்டுமா என கேட்கும் நபரும் இனிமேல் உங்களை ஒருபோதும் அழைக்க மாட்டார்.

இப்போது வங்கி கடன், கிரெடிட் கார்டு போன்ற விளம்பர ஸ்பாம் அழைப்பு வாடிக்கையாளர்களுக்கு வராது. டிராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணைந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க ஒரு புதிய டிஜிட்டல் ஒப்புதல் முறை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பணி சூழலில் வங்கி விளம்பர அழைப்புகள் பொதுமக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தி வரும் நிலையில் டிராய் மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து வாடிக்கையாளர்களிடம் நேரடியாக ஒப்புதல் பெற்ற பிறகு மட்டுமே வணிக தகவல்கள் அனுப்பலாம் என்ற புதிய நடைமுறையை பைலட் திட்டமாக கொண்டு வருகின்றது.

   

வாடிக்கையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் வங்கி விளம்பரங்கள் அனுப்ப முடியாது. ஒவ்வொரு ஒப்புதல் பதிவும் உடனடியாக 127xxx என்ற கோடியில் ஒரு உறுதிப்படுத்தும் மெசேஜ் வரும். இதில் opt-out என்றால் வாடிக்கையாளர்கள் விரும்பவில்லை என்றால் அந்த ஒப்புதலை நீக்கவும் முடியும். வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஒப்புதல்களை எஸ்எம்எஸ், வலைத்தளங்கள் அல்லது வங்கியின் மொபைல் ஆப்புகள் மூலமாக பார்க்கவும் நிர்வகிக்கவும் முடியும். இந்த புதிய திட்டம் மூலமாக ஸ்பாம் அழைப்புகள் குறையும், வாடிக்கையாளர்கள் ஒப்புதல் இல்லாமல் விளம்பரங்கள் வராது, எப்போதும் ஒப்புதலை திரும்ப பெரும் அதிகாரம், நிதி மோசடி வாய்ப்பு குறையும், தகவல் முறையாக உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.