மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு… காலையிலேயே மது பிரியர்களுக்கு வந்த ஷாக் நியூஸ்..!

By Nanthini on ஆனி 22, 2025

Spread the love

புதுச்சேரி அரசு தங்கள் மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கலால் வரி மற்றும் நில வழிகாட்டி மதிப்பு உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்தியுள்ளது. இப்படியான நிலையில் இன்று முதல் உயர்த்தப்பட்ட விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த விலை கொண்ட 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட குவாட்டர் மது இனி 72 ரூபாய் முதல் 74 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்.

அதனைப் போலவே பிராண்டட் மதுபானங்களின் குவாட்டர் 120 ரூபாயிலிருந்து 147 ரூபாயாக உயர்த்தி விற்பனை செய்யப்படும். இதனைத் தொடர்ந்து அனைத்து மதுபானங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இது மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழகத்திலும் மதுபானங்களின் விலை உயர்வுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.