அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி தமிழக வெற்றிக் கழகம் பக்கமும், தங்கமணி பாஜக பக்கமும் நகரத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. முன்னதாக, சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள் ஆதரவாக வாக்களித்த போதே இந்த கூட்டணிப் பேச்சுக்கள் கசிந்தன. அதன் தொடர்ச்சியாக 6 அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிமுகவினர் சாரை சாரையாக தவெகவில் இணையும் ஒரு புதிய அலை உருவாகியுள்ளது.
தொடக்கத்தில் வேலுமணி மற்றும் தங்கமணி ஆகிய இருவருமே ஆளுங்கட்சியான திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், செந்தில் பாலாஜியின் கடுமையான எதிர்ப்பு மற்றும் இருவருக்கும் இருக்கும் பாஜக உடனான நெருக்கம் காரணமாக திமுக இவர்களை ஏற்க மறுத்து கையை விரித்துவிட்டது. இதனால் தவெக பக்கம் செல்லலாம் என இருவரும் ஆலோசித்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமணிக்கு அங்குள்ள தவெகவின் உட்கட்சி சூழல் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. தவெகவின் தற்போதைய அமைச்சரவையில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஏற்கனவே 3 அமைச்சர்கள் இருப்பதும், குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜின் அசுர வளர்ச்சியும் தனது எதிர்காலத்தைப் பாதிக்கும் எனக் கருதி, தங்கமணி தற்போது பாஜக பக்கம் நகரும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
மறுபுறம், கோவையின் பலத்த முகமான எஸ்பி வேலுமணி தவெகவில் இணைய முழு சம்மதத்துடன் இருந்தாலும், மிக எச்சரிக்கையாக காய்களை நகர்த்தி வருகிறார். தனக்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன் இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி, தவெகவில் இணைந்த பிறகு எதிர்காலத்தில் எந்தவித அரசியல் அல்லது சட்ட ரீதியான நெருக்கடிகளும் வந்துவிடக் கூடாது என்பதில் அவர் தெளிவாக உள்ளார். இதனாலேயே, தவெகவில் இணையும் முடிவை எடுப்பதற்கு முன்பாக பாஜக மேலிடத்தின் ‘பச்சைக்கொடி’ மற்றும் அனுமதிக்காக அவர் காத்திருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், எஸ்பி வேலுமணியின் இந்த தவெக நோக்கிய வருகை அக்கட்சியின் தற்போதைய அமைச்சர்களான விக்னேஷ் மற்றும் சம்பத் குமார் ஆகியோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் வேலுமணிக்கு இருக்கும் பலமான சமூக ரீதியிலான செல்வாக்கு மற்றும் அதிமுக பாணியிலான அடிமட்டக் கட்டமைப்பு ஆகியவற்றால், அவர் உள்ளே வந்தால் தங்களது அரசியல் எதிர்காலம் ஓரங்கட்டப்பட்டுவிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். இதனால், எஸ்பி வேலுமணி தவெகவில் இணையும் பட்சத்தில், கோங்கு மண்டல தவெகவிற்குள் மிகப்பெரிய உட்கட்சி மோதல் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…
மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…
ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…