“கட்டிலுக்கு கீழே ஒளிந்து அழுதவர் தானே இந்த செந்தில் பாலாஜி”… சீறிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்… தமிழக அரசியலை உலுக்கும் புதிய சர்ச்சை…!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் கரூர் துயரச் சம்பவம் தொடர்பான விவாதங்கள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், “பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்று கரூர் மக்களுக்குத் தெரியும்” என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்குத் தமிழக அரசுத் தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து செந்தில் பாலாஜியின் விமர்சனங்களுக்கு அடுக்கடுக்கான கேள்விகளுடன் மிக காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல், திமுகவினர் சம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசி திசைதிருப்புவதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டினார். சம்பவத்தன்று இரவு என்ன நடந்தது என்பது அங்கிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கே (SP) இரவு 8:05 மணிக்கு மேல் தான் தெரியவந்தது என்று குறிப்பிட்ட அவர், விபத்து நடந்த ஐந்தே நிமிடத்திற்குள் செந்தில் பாலாஜி எப்படி நேரலை கேமராக்களுடன் அரசு மருத்துவமனைக்குச் சென்றார் என்று கேள்வி எழுப்பினார். விபத்து நடக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து அவர் மருத்துவமனை அருகிலேயே காத்துக் கொண்டிருந்தாரா என்றும், வெறும் அரை மணி நேரத்திற்குள் அங்கொரு நாடகம் அரங்கேற்றப்பட்டு விட்டதாகவும் சாடினார்.

மேலும், இந்த விவகாரத்தில் அப்போதைய திமுக அரசின் அவசர நடவடிக்கைகள் பலத்த சந்தேகங்களை எழுப்புவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். விபத்து நடந்த அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்கு அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரூருக்கு அவசரமாக வர வேண்டிய அவசியம் என்ன என்றும், அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் தனது சொந்த குடும்ப விவகாரங்களைத் தவிர வேறு எதற்காகவாவது அவர் நள்ளிரவில் இப்படிப் பயணித்திருக்கிறாரா என்றும் நிர்மல்குமார் கேள்வி எழுப்பினார். ஒரே இரவில் 40 பேரின் உடல்களையும் உடற்கூறாய்வு செய்ய தேவையான 30 முதல் 40 மருத்துவர்களை உடனடியாக எங்கிருந்து வரவழைத்தீர்கள் என்று கேட்ட அவர், ஆதாரங்களை முழுமையாக அழிக்கும் நோக்கிலேயே உடல்கள் அனைத்தும் அவசர அவசரமாக இரவோடு இரவாகத் தகனம் செய்யப்பட்டன என்றும், எங்களின் தவெக தொண்டர்களை மருத்துவமனைக்குள் விடாமல் அடித்து விரட்டியது யார் என்றும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.

செந்தில் பாலாஜியின் அரசியல் பின்னணி மற்றும் கடந்த காலச் சம்பவங்களைச் சாடிய அமைச்சர் நிர்மல்குமார், அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ய வந்தபோது அரசு மருத்துவமனைக் கட்டிலுக்குக் கீழே ஒளிந்து கொண்டு, அதன் காலைப் பிடித்துக் கொண்டு ‘என்னை விட்டுவிடுங்கள்’ என்று அழுது கதறியவர் தான் இந்த செந்தில் பாலாஜி என்றார். ஊரை ஏமாற்றிப் பணம் பறிக்கத் தெரிந்த இவருக்குத் தற்போதைய தவெக அரசை விமர்சிக்க எந்தவொரு தகுதியும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமன்றி, தற்பொழுது கூட தவெக எம்.எல்.ஏ-க்களைக் குதிரை பேரம் பேசி, ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற வழக்கில் செந்தில் பாலாஜியோடு தொடர்புடைய நபர்களிடம் 50 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பிடிபட்டுள்ளதை நிர்மல்குமார் சுட்டிக்காட்டியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

14 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

22 minutes ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

33 minutes ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

1 மணத்தியாலம் ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

1 மணத்தியாலம் ago