எடப்பாடிக்கு கொடுத்த மிகப்பெரிய ஷாக்…. இரவோடு இரவாக மாற்றி யோசித்த வேலுமணி…. அதிமுகவில் அடுத்த வெடி….!

By Nanthini on ஐப்பசி 12, 2026

Spread the love

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. தவெக இத்தேர்தல்களில் வெற்றிபெற, திமுக இரண்டாம் இடத்தையும், அதிமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதும் கடும் விவாதப் பொருளாகியுள்ளது. அதிமுகவின் இந்த படுதோல்வி அக்கட்சியின் தலைமை மீதான கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் தற்போதைய நகர்வுகள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நேரடி அரசியல் ஆட்டத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகின்றன.

சென்னை மெட்ரோ விவகாரத்தில் தவெக தலைவர் விஜயையும் அவரது செயல்பாடுகளையும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். “விஜய் போட்டோஷூட் நடத்துகிறார்” என்று எடப்பாடி மிகவும் காட்டமாகத் தாக்கியிருந்த சூழலில், அதற்கு முற்றிலும் முரணாக எஸ்பி வேலுமணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடியின் விமர்சனம் வந்த சில மணிநேரங்களிலேயே, வேலுமணி விஜயின் எக்ஸ் பக்கத்தைத் டேக் செய்து வாழ்த்துக் கூறியது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

தனது பதிவில், பூந்தமல்லி – வடபழனி இடையேயான புதிய மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் ஆகியோருக்கு எஸ்பி வேலுமணி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அவர் பெருமையுடன் நினைவு கூர்ந்துள்ளார். இதன் மூலம், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிலிருந்து விலகி, மாற்று அரசியல் கணக்குகளை வேலுமணி போடத் தொடங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

   

அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் சென்னை மெட்ரோ திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன என்பதை வலியுறுத்திய வேலுமணி, அதேவேளையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தவெகவையும் விஜயையும் கடுமையாக எதிர்த்து வரும் வேளையில், கட்சியின் மூத்த தலைவரான வேலுமணி விஜய்க்குப் பாராட்டுத் தெரிவித்தும, முதலமைச்சர் என்று குறிப்பிட்டுக் கூறியிருப்பதும் திட்டமிட்ட அரசியல் வியூகமாகவே பார்க்கப்படுகிறது.

 

மதுராந்தகம், தாராபுரம் தோல்விகளால் ஏற்கனவே பலவீனமடைந்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, எஸ்பி வேலுமணியின் இந்த அதிரடி பதிவு மிகப்பெரிய அரசியல் அடியாகவும், சவாலாகவும் மாறியுள்ளது. தேர்தல் தோல்வி தந்த சோர்விலிருந்து அதிமுக மீண்டு வருவதற்கு முன்பே, உட்கட்சி மோதலும் வெளிப்படையான தலைமைப் போரும் வெடித்துள்ளதால், வரவிருக்கும் நாட்களில் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.