ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை…! சவரன் ரூ.1,07,000-ஐ தாண்டி புதிய உச்சம்… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…!!

By Devi Ramu on கார்த்திகை 5, 2026

Spread the love

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சமீபத்திய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,280 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,07,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமிற்கு மேலும் ரூ.285 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,385-க்கு விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ.210-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,10,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மற்றும் அதிரடியான உயர்வு நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.