“அதிபர் டிரம்ப் இறந்துவிட்டாரா?”…. ஈரான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோவால் உலக அரங்கில் வெடித்தப் புயல்… சர்வதேச அரசியலில் உச்சக்கட்ட பதற்றம்….!

By Nanthini on கார்த்திகை 5, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறந்துவிட்டதாகவும், அவரது முகத்தில் ஈ மொய்ப்பது போன்றும் ஈரான் அரசு ஊடகங்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் வெளியான பதிவு சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, டிரம்ப் மயக்க நிலையில் இருப்பது போலவும், அவரை அமெரிக்க அதிகாரிகள் குப்பைத் தொட்டியில் வீசுவது போலவும் சித்தரிக்கப்பட்ட கேலிச்சித்திர வீடியோக்களையும் ஈரான் தரப்பு வெளியிட்டிருந்தது. சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டிரம்ப் தலைமையிலான கட்சி தோல்வியைச் சந்தித்ததைக் குறிக்கும் வகையிலும், ஈரான் மீதான அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடையின் பின்னணியிலும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நாடுகளுக்கிடையேயான அரசியல் மற்றும் இராஜதந்திர மோதல்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை இந்தச் சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஒரு நாட்டின் தலைவரை இத்தகைய அவதூறான மற்றும் நாகரிகமற்ற முறையில் சித்தரிப்பது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் உலகளாவிய அரசியல் பார்வையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டின் அதிபருக்கு எதிராக அரசு மட்டத்திலேயே இதுபோன்ற சமூக வலைதளப் பதிவுகள் வெளியிடப்படுவது உலக அரங்கில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.