பொதுவாக சினிமா துறையை பொருத்தவரை ஒரு சிலர் ஒரு சில படங்களிலேயே பிரபலமாகி விடுவார்கள். அந்த வகையில் விக்ரமின் “தூள்” படத்தில் சொர்ணாக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து மிகவும் பிரபலமானவர் தான் சொர்ணாக்கா. இவருடைய உண்மையான பெயர் சகுந்தலா. மகாராஷ்டிராவை பூர்வமாகக் கொண்டவர் .இவருடைய அப்பா ஒரு ராணுவ அதிகாரி.
இவருக்கு மொத்தம் ஆறு சகோதரிகள் . முதலில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்த இவர் முதன்முறையாக மா பூமி என்ற தெலுங்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் தெலுங்கில் வெளியான ஒக்கடு என்ற படம் இவரை மேலும் பிரபலமாக்கியது.

#
தெலுங்கில் ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் தரணி இயக்கத்தில் 2003 ஆம் வருடம் வெளியான தூள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அது மட்டுமின்றி சிவகாசி, மச்ச காளை, மதுரை வீரன் ,திரு ரங்கம் போற்ற படங்களில் நடித்தார். இதற்கிடையில் 63 வயதில் கடந்த 2014 ஆம் வருடம் ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.