விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 2 சீரியலில் அர்ச்சனா என்ற பில்லி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் வி.ஜே அர்ச்சனா. சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்த இவருக்கு ராஜா ராணி 2 சீரியல் தான் அறிமுகம் கொடுத்தது. அதில் சிறப்பாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்ற அர்ச்சனா இறுதியில் டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றார். பிக் பாஸ் டைட்டில் வெற்றி பெற்ற உடனே பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக நடித்த நடிகர் அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது.
இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதன் பிறகு இருவரும் ஒன்றாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டதை தொடர்ந்து இருவருக்கும் இடையே காதல் இருப்பதை ரசிகர்கள் உறுதி செய்தனர். இந்த நிலையில் கடந்த பிக் பாஸ் சீசனில் அர்ச்சனா பங்கேற்றது போல தற்போது அருண் பிரசாத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அர்ச்சனாவின் சிபாரிசில் தான் அருண் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் தகவல் வெளியானது. இப்படியான நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த அருண் தன்னுடைய காதலி அர்ச்சனாவுக்கு இரவு 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
அப்போதே இவர்கள் இருவருக்கும் இடையேயான காதலை ரசிகர்கள் உறுதி செய்து விட்டனர். அதனைத் தொடர்ந்து அருண் பிரசாத்தை பார்க்க பிக் பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனா வருகை தந்தார். அங்கு அனைவரும் முன்பும் தன்னுடைய காதலியை அருண் அறிமுகம் செய்து வைத்தார். பிறகு அருணுக்கு வேண்டிய அறிவுரைகளை கொடுத்து விட்டு அர்ச்சனா அங்கிருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் அர்ச்சனா தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்ட அன்சிதா மற்றும் ஜெஃப்ரி ஆகியோருடன் சேர்ந்து தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/stories/iam_archanaravichandran/3536769477373502375?utm_source=ig_story_item_share&igsh=MXhpdnZjbHRra2lvOA==