soori

கண்டிப்பா படம் Direction பண்ணனும்னு லட்சியம் இருக்கு… என் முதல் படத்தோட கதை இதுதான்… ரகசியங்களை பகிர்ந்த சூரி…

By admin on மார்கழி 16, 2024

Spread the love

சூரி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். தமிழ் சினிமாவில் 1998 ஆம் ஆண்டு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். பிறகு பல தொலைக்காட்சி தொடர்களிலும் படங்களிலும் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார் சூரி.

   

2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் தான் சூரிக்கு நல்லதொரு கதாபாத்திரம் கிடைத்தது. அதில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் கலந்து கொள்வது போல் நடித்திருந்தார். அந்த காமெடி பிரபலமானதால் இவரை பரோட்டா சூரி என்றும் மக்கள் அழைத்தனர். அந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து நான் மகான் அல்ல ஆடு புலி தூங்கா நகரம் குள்ளநரி கூட்டம் சுந்தரபாண்டியன் மனங்கொத்தி பறவை போன்ற திரைப்படங்களில் ஹீரோவுக்கு நண்பனாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் சூரி.

   

தொடர்ந்து ஒரு நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் நல்லதொரு இடத்தை பிடித்து வலம் வந்து கொண்டிருந்த சூரியை விடுதலை திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்தார் வெற்றிமாறன். இந்த திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. தற்போது சூரியன் நடிப்பில் விடுதலை பாகம் 2 வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் கருடன் திரைப்படத்திலும் முன்னணி நடிகராக நடித்து அசத்தி இருப்பார் சூரி.

 

தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சூரி தான் படம் இயக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருப்பதாக கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் என்னுடைய அப்பா முத்துசாமி என் அம்மா செங்கை அரசி. இவங்களோட கதை ஒரு நாள் தியேட்டருக்கு வரும். அதை எதிர்காலத்தில் நான் கண்டிப்பாக இயக்குவேன். என்னுடைய முதல் படமாக அவர்களது கதையைத்தான் இயக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கிறேன். நான் கண்டிப்பாக படம் எடுக்காமல் ஓய மாட்டேன் என்று ரகசியங்களை பகிர்ந்து இருக்கிறார் சூரி.