தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். இவர் வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே வேற லெவல் ஆல்பத்தை கொடுத்திருந்த இவர் அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராகவும் தற்போது மிக சிறந்த நடிகராகவும் உருவாகி இருக்கின்றார்.

மேலும் ஜிவி பிரகாஷ் குமார் ஏ ஆர் ரகுமானின் சகோதரியின் மகன்தான். சிறுவயதிலேயே ஏ ஆர் ரகுமான் இசையில் சில பாடல்களில் அவரது மழலை குரல் ஒலித்து இருக்கிறது. தற்போது முன்னணி இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.முதலில் இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடகராக அறிமுகமாகி அதன் பிறகு வெயில் என்ற திரைப்படத்தில் இசையமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். அதன்படி பொல்லாதவன், ஆனந்த தாண்டவம், அங்காடி தெரு, ராஜா ராணி, ஆடுகளம், சூரரைப் போற்று உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள தங்கலான் திரைப்படத்திற்கும் இவர் இசையமைத்துள்ளார். மறுபக்கம் சினிமாவில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் ஜிவி பிரகாஷ் கலக்கி கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், ஏஆர் ரஹ்மான் என்னுடைய மாமா தான். நான் சின்ன வயசுல அவரை மாமான்னு தான் கூப்பிடுவேன். அதுக்கப்புறம் அவர்கிட்ட அசிஸ்டென்ட் ஆ வேலை செஞ்சேன். அப்போ எல்லாரும் இருப்பாங்க அதனால் அவரை சார்னு தான் கூப்பிடுவேன். என்னோட தங்கச்சி மாமான்னு கூப்பிடும். ஆனா நான் சார்னு தான் கூப்பிடுவேன் என்று பேசியுள்ளார்.
