மழையால் மல்லாக்க படுத்த வசூல்.. சூது கவ்வும் 2-வின் முதல் நாள் கலெக்ஷன் இவ்ளோ தானா?

By Soundarya on மார்கழி 14, 2024

Spread the love

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களை மாஸ் ஹீரோவாக உயர்த்திய படம் சூது கவ்வும். அந்த படத்திற்கு முன்னர் வரை தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வந்தார். இவரை ஒரு கெத்தான ரோலில் காட்டிய படம் என்றால் அது சூது கவ்வும் படம் தான். இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார் .

சூது கவ்வும் 2' Review: அசலை நெருங்கியதா, அபத்தமாக தொங்கியதா? | Soodhu  Kavvum 2 movie review - hindutamil.in

   

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த வெற்றிக்கு பின்னர் சூத்து கவ்வும் இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர்  சிவி குமார், அதில் மிர்ச்சி சிவாவை ஹீரோவாக நடிக்க வைத்தார். இந்த படத்தை புதுமுகம் இயக்குனர் அர்ஜுன் இயக்கி உள்ளார். கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கருணாகரன், சஞ்சிதா செட்டி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

   

சூது கவ்வும் 2 விமர்சனம்: அதே டெம்ப்ளேட், அதே புரொபர்ட்டி;இப்படியொரு  சுவாரஸ்யமற்ற சீக்குவல் அவசியமா? |Soodhu Kavvum 2 movie digital review -  Vikatan

 

இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இதற்கிடையில் புஷ்பா 2  படம் தமிழ்நாட்டில் வசூலை சக்க போடு போட்டு வரும் நிலையில் அதற்கு போட்டியாக இந்த படம் ரிலீஸ் ஆனாலும் தற்போது தமிழ்நாட்டில் மழை வருவதால் சூது கவ்வும் படத்தின் முதல் நாள் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாடும் நாட்டு மக்களும்' - வெளியான 'சூது கவ்வும் 2' அப்டேட் | nakkheeran

இந்த படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் வெறும் 45 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. புஷ்பா 2 படத்தில் நேற்றே வசூலை விட இது மிகவும் கம்மி என்று கூறப்படுகிறது . மேலும்  இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இந்த இரண்டு நாட்களில் அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பிக் கப் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.