52 வயதில் தந்தை செய்த சாதனையை பார்த்த மகன், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. லட்சியங்களையும் கனவுகளையும் அடைய வயது எப்போதும் ஒரு தடையாக இருக்காது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது. அதாவது 52 வயது தந்தை ஒருவர் செய்த விஷயம் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய கனவான எம்பிஏ பட்டத்தை தன்னுடைய 52 வயதில் பெற்றுள்ளார். இதனை அவருடைய மகன் மைத்ரேயா சாத்தே நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து தந்தைக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
தந்தை வீட்டுக்குள் வரும்போது அவருடைய முக அமைப்பை கொண்ட முகமூடிகளை வீட்டில் உள்ளவர்கள் அணிந்து கொண்டு அந்த நபர் போன்று காத்திருந்தனர். இதனை பார்த்ததும் அவருடைய திகைப்பு, ஆரவாரங்கள் மற்றும் கைத்தட்டல் அவரை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் இவருடைய இந்த முயற்சியை பலருக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில், பெற்ற தாயே தன் சொந்தக் குழந்தைகளைக் கம்பத்தில் கட்டி வைத்துக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிகரமான…
இயற்கை தனக்குள் எண்ணற்ற மர்மங்களைக் கொண்டு மனிதர்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், தவளைகளின் உலகம் தொடர்பான…
நெல்லையில் 5 வயது பெண் குழந்தையின் கண்முன்னே இளம்பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை…
விஜய் முதலமைச்சர் ஆகக் கூடாது எனத் தான் தடுக்க முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் மிகக் கடுமையான வார்த்தைகளில்…
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அந்த நிலையை அடைவதைத் தான் தடுக்க முயன்றதாகப் பரவும் வதந்திகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி…
டெல்லியின் புகழ்பெற்ற 'சோர் பஜார்' என்ற பெயரைக் கேட்டாலே, மலிவான பொருட்கள் மற்றும் மோசடி பற்றிய பிம்பங்களே பலரது மனதில்…